ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகில் முகோனா என்ற இடத்தில் பார்வையற்றோருக்காக சலாமா என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. மின்னல் வேகத்தில் அந்தத் தீ பள்ளிக்கூடம் முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
தீயில் சிக்கி 11 மாணவிகள் உயிரிழந்து விட்டதாகவும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் மட்டுமே உயிர் தப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பார்வையற்ற மாணவிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் எரிந்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் கண்டறிய டி.என்.ஏ. சோதனை நடத்த உள்ளதாகவும் மாவட்ட பாதுகாப்பு தலைவர் பாத்திமா இன்டிபசா தெரிவித்துள்ளார்.
இந்தத் தீவிபத்தின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. உகாண்டாவில் பள்ளிகளில் தீ விபத்துகள் நேருவது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் தங்குமிடங்களில் மின் தடை ஏற்பட்டு விளக்குகள் அணையும்போது மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கிறபோது அது தீவிபத்துக்கள் ஏற்பட வழிநடத்தி விடுகிறது.