News

கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு – ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்சவுக்கும் இடையில் நேற்று அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கலந்துரையாடல் நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ச அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top