News

முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அதன்படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top