News

150 பேர்களை பலிவாங்கிய ஹாலோவீன் விபத்தில் சிக்கிய கனேடியர்

 

தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களில் கனேடியர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த துயரத்தில்153 பேர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளதாகவும் டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பி, தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

150 பேர்களை பலிவாங்கிய ஹாலோவீன் விபத்தில் சிக்கிய கனேடியர்: வெளிவரும் புதிய தகவல் | South Korea Crowd Surge Canadian Among Injured

@getty

 

இந்த நிலையில், ஃபெடரல் நிர்வாகம் வெளியிட்ட தகவலில், குறித்த விபத்தில் கனேடியர் ஒருவரும் சிக்கியுள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குறித்த நபருக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், காயமடைந்துள்ள கனேடியர் தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது. தென் கொரிய அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 153 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும், பெரும்பாலும் இளையோர்களும் 30 வயது கடந்தவர்களும் மரணமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, இலங்கையர் உட்பட 19 வெளிநாட்டவர்களும் மரணமடைந்தவர்களில் உட்படுவார்கள் என தென் கொரிய அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.

சனிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக நம்பப்படுகிறது. இதனிடையே, சர்வதேச தலைவர்களுடன் இணைந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தென் கொரியாவில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top