22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்: மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் செலுத்தப்பட்ட நிலையில் எதிராக எவ்வித வாக்குகளும் செலுத்தப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை தவிர்த்திருந்தார்.
இதன்படி, 174 மேலதிக வாக்குகளால் 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.