News

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ்க்குடும்பம்! 

அவுஸ்திரேலியா- கான்பெராவின் பகுதியில் குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றினை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தமிழ் குடும்பத்தின் உயிரிழப்பு தொடர்பில் கொலை, தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் குளத்திலிருந்து தாய் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உயிரிழந்த மூவருக்கும் தொடர்புள்ளதாகவும், கொலை, தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உயிரிழப்பிற்கான தெளிவான மரண விசாரணை அறிக்கையை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மூவரும் உயிரிழந்த குளத்திற்கு அருகில் வாகனமொன்று நிறுத்தப்பட்டடிருந்த நிலையில், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top