News

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது நேர்ந்த சோகம் – நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் தலைநகர் யவ்ண்டியில் உள்ள டமாஸ் மாவட்டத்தில் உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

20 மீட்டர் உயரத்திற்கு மணல் மேடு அமைந்துள்ள பகுதி அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண் மேடு சரிந்து விழுந்தது. இதில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்து மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மண் சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மண் சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top