News

இலங்கை தேசமே ஏற்றுவிட்டது…விடுதலை புலிகளே உலகின் ஒழுக்கமான இயக்கம்: அவதானிப்பு மையம் பெருமிதம்

உலகில் ஒழுக்கமான இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்று சிங்கள தேசம் ஏற்றுக் கொண்டுள்ளது என அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகளுக்கு தடை

தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 26ம் திகதியை நினைவு தினமாக மக்கள் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து இருந்தது.

இருப்பினும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை உலக தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

 

 

ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பெரும் திரளான இளைய தலைமுறையினர் தமிழீழத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை எழுச்சிகரமாக்கியுள்ளனர்.

உலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் பெருமிதம்

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்று சிங்கள தேசமே ஏற்க தொடங்கி விட்டது என தெரிவித்துள்ளது.

மேலும் விடுதலை புலிகள் இயக்கம் சாத்தியப்படுத்திய “குற்றமற்ற தேசம்” என்ற முறை உலகிற்கே முன்னுதாரணமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அவதானிப்பு மையத்தின் அறிக்கையில், கடந்த 23/11/2022 ம் அன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, தமிழீழ விடுதலைப் புலிகள் உலக அளவில் ஒழுக்கத்தில் தலைசிறந்த இயக்கமாக விளங்கியுள்ளனர் என்று தெரிவித்து இருப்பது விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் எதிரிகளும் வியந்து போற்றும் நிலையில் உள்ளமைக்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.

அதைப்போல இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒருவர், புலிகள் இயக்கத்தில் மது மற்றும் ரௌடிசத்திற்கு எதிராக இருந்த வலுவான ஒழுக்க நிலையை பாராட்டியுள்ளார். இது தமிழர் தேசத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள ஒழுக்க மதிப்பை எதிரிகளாலும் கொச்சைப்படுத்த முடியாது என்பதை காலம் நிரூபித்துள்ளமையின் வெளிப்பாடாக நாம் கருதுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top