News

உக்ரைனிய பெண்களே..!வெள்ளை துணியை வீட்டில் தொங்க விடுங்கள்: ரஷ்ய படை உத்தரவால் அதிர்ச்சி

 

யாரை எல்லாம் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பதை ரஷ்ய வீரர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள உக்ரைனிய பெண்களை அவர்களது வீட்டின் வாசலில் வெள்ளை கொடியை கட்டுமாறு ரஷ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பெண்கள் மீதான ரஷ்ய படைகளின் அத்துமீறல்

கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக பெண்கள் மீது நடத்தப்படும் போர் அத்துமீறல்கள் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் உக்ரைன் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதற்காக ரஷ்ய ராணுவம் அவர்களது வீரர்களின் பாலியல் உணர்ச்சிகளை அதிகப்படுத்த வயகரா மாத்திரைகளை வழங்கியதாக ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஷ்ய அதிகாரிகளின் புதிய உத்தரவுகள் உக்ரைனிய பெண்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

அதாவது அந்த உத்தரவில் உக்ரைனிய பெண்கள் தங்கள் வீட்டின் முன் வெள்ளை துணிகளை கட்டி தொங்க விட வேண்டும்  என்பதே.

இதன்மூலம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனிய பெண்களில் யாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பதை அடையாளப்படுத்தி கொள்ள இது உதவும் என்பதால் இவ்வாறு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு அருகில் உள்ள நகரமான பெரெஸ்தியங்கா பகுதியில் வசிக்கும் உக்ரைனிய பெண் ஒருவரிடம் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே வெள்ளை துணியை தொங்கவிடுமாறு கட்டளையிட்டதாக குறிப்பிட்டுள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top