News

உக்ரைனிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையம்- ஏவுகணை தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைனின் டினிப்ரோவில் எரிவாயு உற்பத்தி நிலையம் மற்றும் ஏவுகணை தொழிற்சாலை ஆகியவை மீது ரஷ்யா இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸபோரிஸியா பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக நான்கு பேர் இறந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில், தொடர்ச்சியான போர்க்கள பின்னடைவைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய தாக்குதலாக இது பார்க்கப்படுகின்றது. எனினும், இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்யா இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை

இதற்கிடையில், உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டினிப்ரோவை ஏவுகணைகள் தாக்கியதாக பிராந்திய தலைவர் கூறினார். இதனால், ஒரு தொழில்துறை வளாகத்தில் ஏற்பட்ட தீயினால் 14பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏவுகணைகள் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நகரின் பிவ்டென்மாஷ் தொழிற்சாலை குண்டுவீச்சுக்கு உட்படுத்தப்பட்டது என்று பிரதமர் கூறினார்.

நிகோபோல் நகரைச் சுற்றி 70 குண்டுகள் வீசப்பட்டதாகவும் இந்த குண்டுகள் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீருக்கு தடையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

அதிகாரிகளின் புதுப்பிப்புகளின்படி, ஒடேசா மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் அதிக உள்கட்டமைப்பு இலக்கு வைக்கப்பட்டது, ஒவ்வொரு இடத்திலும் மூன்று பேரு காயங்களை ஏற்படுத்தியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top