ஒன்றாரியோ மாகாணத்தில் கல்விப் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசாங்கத்தின் கடுமையான சட்டங்களை மீறி கல்விப் பணியாளர்கள் பாரிய பேரணியாக அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றாரியோவின் குயின்ஸ் பார்க்கில் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழில் உடன்படிக்கை தொடர்பிலான முரண்பாட்டு நிலைமையினால் கல்விப் பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கல்விப் பணியாளர்களின் போராட்டம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மாகாணம் முழுவதிலும் உள்ள சுமார் 55000 பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபடும் பணியார்களுக்கு நாளொன்றுக்கு 4000 டொலர்கள் அபராதம் விதிப்பதற்கு அரசாங்கம் சட்டம் நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.