தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு வருடத்துக்குள் தீர்வு வழங்கப்படுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது ஏமாற்றும் செயலாகும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும் எனவும், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எனது பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கேற்றவாறு புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். அது விரைந்து நிறைவேற்றப்படும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
தமிழ் மக்களுக்கு மீள்குடியேற்றப் பிரச்சினை, காணிப் பிரச்சினை, காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, அரசியல் தீர்வுப் பிரச்சினை எனப் பல பிரச்சினைகள் உண்டு. எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அந்தப் பணியைத் தற்போது ஆரம்பித்துள்ளேன்.
அதன் ஒரு கட்டமாகவே தண்டனை பெற்று சிறையில் இருந்த அரசியல் கைதிகள் சிலருக்குப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளேன். என்னால் இயன்ற காரியங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பேன். அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும்.
து தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியும் வருகின்றேன் என அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், தீர்வு விடயத்தில் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என அவர் பதில் வழங்கியுள்ளார்.