பலவந்தமான அடிப்படையில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, சில மணி நேரங்கள் அவரை தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் குறித்த நபரிடமிருந்த ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த கடத்தல் சம்பவத்துடன் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் றொரன்டோவைச் சேர்ந்த 21 வயதான சுலைமான் சுபீ என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆயுத முனையில் கொள்ளை, கடத்தல், வாகன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 23 வயதான முஷின் சுபீ மற்றும் 20 வயதான அப்துலாய் பாட்டில் ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர். சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார், மக்களின் உதவியை கோரியுள்ளனர்.