கனடாவில் பலஸ்தீன ஏதிலி பெண் ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு எதிர்ப்பை வெளியேற்றுள்ளார்.
கனடாவில் குடியேறும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசித்த பாலஸ்தீனப் பெண் ஒருவர் இவ்வாறு கத்தியால் குத்திக்கொண்டு உள்ளார்.
ஏதிலிகளின் எண்ணிக்கை நாளைக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அநேகமான ஏதிலிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனேடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் விவகார அதிகாரிகளின் முன்னிலையில் இவ்வாறு கத்தியில் குத்தி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தங்களின் நிலைமை குறித்து அரசாங்கமோ அதிகாரிகளோ, எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை என தெரிவித்து அஸீஸா அபுசிர்தனா (Aziza Abusirdana) என்ற 22 வயதானபெண் தனது வயிற்று பகுதியில் கத்தியால் குத்திக்கொண்டு எதிர்ப்பை வெளியேற்றுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக தான் நிற்கதியான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் டொரன்டோ ஹோட்டல் ஒன்றில் ஏழு மாதங்களாக தங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தமக்கு கிடையாது என்ற போதிலும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு கத்தியால் குத்திக் கொண்டதாகவும் குறித்த பின் தெரிவித்துள்ளார்.
வாழ்வதற்கு பாதுகாப்பான ஓர் இடத்தை பெற்று தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு உரிய பதிலை அதிகாரிகள் வழங்க தவறியுள்ள உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தங்குவதற்கு பொருத்தமான இடத்தை வழங்க முடியாவிட்டால் ஏன் அதிகாரிகள் தன்னை நாட்டுக்குள் அனுமதித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.