மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்துள்ளது.
பல கனவுகளுடன் பெற்ற பிள்ளைகளை கல்லறை வடிவில் பார்த்து பெற்றோர் புலம்புகின்றனர்.
அண்ணன்,தம்பி,மாமா, என அவர்களின் அனைத்து உறவுகளும் கலங்கி நிற்கின்றனர்.
மனதாலும் உடலாலும் போரினால் பல இழப்புக்களை உணர்ந்த உள்ளங்கள் தமது வலிகளை சொல்வதற்கு வார்த்தையின்றி கண்ணீரில் கரைந்து நிற்கும் காட்சிகள் தாண்டியடி துயிலும் இல்லத்தில் நிறைந்துள்ளன.
இந்நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் தாயார் பொது சுடர் ஏற்றியதுடன், அருட்தந்தை ஜோசப் மேரி, முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் அதிகளவான மக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.