மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் உள்ள தியாகிகள் அரங்கத்தில் காங்கோ பாடகர் பாலி இபுபாவின் இசை நிகழ்ச்சிக்காக 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர்.
ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் முண்டியடித்துக் கொண்டு போய் உட்கார்ந்தனர். 80 ஆயிரம் பேர் அமரும் அரங்கில் அதை விட அதிகமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரங்கத்திற்கு வெளியேயும் நீண்ட வரிசையில் பலர் காத்துக்கிடந்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரங்கத்திற்கு வெளியே இருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதில் 2 காவலர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.