News

சந்தேகத்தால் வந்த வினை ஒரு கொலை….! 49 பேர்களுக்கு மரண தண்டனை…!

அல்ஜீரியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக கூறி ஒருவரை பொதுமக்கள் கூட்டமாக அடித்து கொன்றனர். இந்த வழக்கில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவில் 2021 ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ வேகமாக பரவியது.அந்த காட்டுத்தீயில் சுமார் 90 பேர்கள் மரணமடைந்திருந்தனர். இதற்கு ஜமீல் பின் இஸ்மாயில்(38) தான் காரணம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதை அறிந்த இஸ்மாயில் போலீசாரின் உதவியை நாடியுள்ளார்.

அங்கு வந்த போலீசார் ஜமீல் பின் இஸ்மாயிலை வாகனத்தில் ஏற்றினர். கூட்டமாக வந்த பொதுமக்கள் கட்டுப்பாட்டை மீறிபோலீஸ் வாகனத்தில் இருந்து அவரை இழுத்து சென்று, கொடூரமாக தாக்கியதுடன், உயிருடன் எரித்துக் கொன்றது. இதனிடையே, இஸ்மாயிலை பாதுகாக்க முயன்ற போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கைதான கிராம மக்களில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க நாடான அல்ஜீரியாவில் 1993க்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்படுவது தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 பேர்களுக்கு தலா 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும் ஜாமின் மறுப்பும் அறிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top