News

சிறிலங்கா இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்கு தயார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் சிறிலங்கா இராணுவத்தின் 65 ஆவது காலாட்படை பிரிவினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் துயிலும் இல்ல வளாகத்திற்கு அருகில் இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாட்டு குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நாளைய தினம் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்ப்பட்டுள்ளதாகவும் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமது உறவுகளை விதைத்த பெற்றோர் உறவுகள் அனைவரையும் தங்கள் பிள்ளைகளை அஞ்சலிக்க அணிதிரண்டு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top