News

சீனா சீனாவில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து- 36 பேர் உயிரிழப்பு

ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மத்திய சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 4:22 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மீட்புப் பிரிவினர் உடனடியாக படைகளை அனுப்பி வைத்தனர். அதன்படி, பொது பாதுகாப்பு, அவசரப்பிரிவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார விநியோக பிரிவுகள் அவசர கையாளுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒரே நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தவிர, மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலவீனமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top