அந்த வகையில் மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்திற்கு உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகின்றது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம் பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.