News

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: இம்ரான் காயம் – மருத்துவமனையில் அனுமதி

 

பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கான் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வரிசாபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவருடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.காயம் ஏற்பட்டதை அடுத்து இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top