News

புகலிட கோரிக்கை நிராகரிப்பு! பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்

ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது.

கடந்த 31 ஆம் திகதி இவர்களின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன் காத்திருப்பு பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் 8 புலம்பெயர்வோர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை நிர்வாக நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை நிராகரித்தது.

இந்தநிலையில் குறித்த அனைவரும் மிக விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஐந்து பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது தாம் அனைவரும் நாடு திரும்பினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

எனினும் அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் 8 புலம்பெயர்தோர் தங்களின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இன்னும் சில நாட்களில் அவர்கள் குறித்த நீதிமன்றின் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவே நம்பப்படுகின்றது.

கடந்த வார இறுதியில் ஒரு குழந்தை உட்பட 4 புலம்பெயர்வோர் தேசிய பிரதேசத்தில் தங்கியிருக்க அதிகாரம் பெற்றனர்.

ஒக்டோம்பர் 20ஆம் திகதி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மீன் படகில் ரீயூனியன் தீவுக்கு வந்த 17 புலம்பெயர்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ரோலன்ட் கரோஸ் விமான நிலையத்தில் காத்திருப்பு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் ரீயூனியன் கடற் பிரதேசத்தில் இலங்கை குடியேற்ற வாசிகளுடன் மூன்று படகுகள் பிரவேசித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்டம்பர் 17ஆம் திகதி பிரவேசித்த படகில் 46பேர் இருந்ததாகவும் அவர்களில் 39பேர் காத்திருப்பு பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய 7பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top