வவுனியாவில் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இந்தப் போராட்டமானது இன்று (04.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில் 96 நாளான இன்றைய போராட்டத்தில் தமது கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தினை உடன் நிறுத்து, கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்விற்கான மக்கள் குரல், வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும், ஜனநாயக பாதையில் மக்களே மக்களுக்காய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.