அமெரிக்கா-தென்கொரியா கூட்டு போர்பயிற்சி ஒத்திகைகளுக்கு இடையே வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது.
அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் நடத்தி வருகிற கூட்டுப் போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்து இருக்கிறது.
இதனால் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரே நாளில் 23 ஏவுகணைகளை அந்நாடு சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் வட கொரியா குறுகிய தூரம் சென்று தாக்கும் வகையிலான 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இன்று கடலில் வீசி சோதனை செய்ததாக தென்கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ஏவுகணைகள் வடக்கின் மேற்குக் கடலை நோக்கி 130 கிலோமீட்டர்கள் (80 மைல்கள்) பறந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
கூட்டுப் பயிற்சியின் இறுதி நாளில் தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா, இரண்டு B-1B சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்டது, இது வட கொரியாவின் தீவிரமான சோதனை நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .