News

6 பேர் விடுதலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேன்முறையீடு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆறு பேரை விடுவித்து இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்திய மத்திய அரசு அதே சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், விஜயகுமார் ஆகிய நான்கு பேரும் திருச்சி சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய இருவரும் தமது இருப்பிடங்களுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் அனைவரையும் விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top