அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பனிப்பொழிவு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அதிகமான பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது புறப்படும் நேரம் தாமதமாகியுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 315 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 1 ஆயிரத்து 400 விமானங்களில் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து சேவை மேலும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.