News

அமெரிக்காவில் நடுவானில் தடுமாறிய விமானம்- 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தடுமாறியது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்த விமானம் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தடுமாறியது. இதனால் பீதியடைந்த பயணிகள் பயத்தில் அலறினர். விமானம் தடுமாறியதில் 2 பயணிகள், 3 விமான பணியாளர்கள் என 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் இயல்பு நிலை திரும்பியதும் விமானம் ஹூஸ்டன் நகரை நோக்கி தொடர்ந்து பயணித்தது.

ஹூஸ்டன் நகர விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழு படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் இருந்து ஹவாய் தீவுக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானம் நடுவானில் தடுமாறியதில் 36 பேர் படுகாயம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top