News

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வேல்ஸைச் சேர்ந்த சிறுமியும் அடங்கும். எனினும், ஸ்கொட்லாந்து அல்லது வடக்கு அயர்லாந்தில் இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் பொதுவாக லேசானவை, ஆனால் மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்படலாம். தங்கள் குழந்தையின் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படும் பெற்றோர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குரூப் ஏ ஸ்ட்ரெப் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top