News

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சீனாவில் முதல் கொரோனா பலி..!!

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சீனாவில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாத இறுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் இந்த போராட்டம் அதிபர் ஜின்பிங்குக்கு எதிரான போராட்டமாக மாறியது. எனவே மக்களின் கோபத்தை தணிக்க கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்தது.

அந்த வகையில் கொரோனா தொற்று அதிகரித்தபோதும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கடந்த 7-ந் தேதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அங்கு தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் முதல் முறையாக அங்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசு ஊடகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் கடைசியாக கடந்த 3-ந் தேதி கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொரோனா காட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மயானங்களில் தினந்தோறும் 100-க்கும் அதிகமான பிணங்கள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top