கனடாவின் டொரண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 19:20 மணிக்கு (12:20 GMT) டொரண்டோவிற்கு வடக்கே 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ள வோகனில் உள்ள கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கும் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படும் ஆயுததாரிக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிவராத காரணம்
கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் – ஐவர் சுட்டு படுகொலை | Vaughan Condo Shooting
என்ன காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது பற்றியவிபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.