இலங்கை இளைஞர் ஒருவர், கனடாவில், சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் எட்மண்டனில் வாழும் இமேஷ் ரத்னாயக்க (21) என்ற இலங்கை இளைஞர், ஆறு சிறுமியரை துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
11 வயதேயான சிறுமிகளைக் கூட அவர் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது. நிபந்தனைகளின் பேரில் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இம்மாதம் 9ஆம் திகதி, இமேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, பாலியல் துஷ்பிரயோகம், சிறார் ஆபாச படங்கள் உருவாக்கியது, சிறுமிகளை ஆசை காட்டி கவர்ந்திழுத்தது ஆகிய கூடுதல் குற்றச்சாட்டுகள் உட்பட, மொத்தம் 31 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர் விசாரணையில், சுமார் 100 சிறுமிகள் வரை இமேஷால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியரை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில், எட்மண்டன், Morinville மற்றும் St. Albert பகுதியில் வாழும் பிள்ளைகளின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் யாராவது இந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய பிள்ளைகளிடம் விசாரிக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.