சிறார்களுடன் கொழுந்துவிட்டெரிந்த பேருந்து… பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் சிறார்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலன பயணிகளுடன் பேருந்து ஒன்று தீ விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தை பார்வையாளர்கள் சிலர் காணொளியாக பதிவு செய்துள்ளனர். பீதியை ஏற்படுத்தும் தொடர்புடைய சம்பவமானது வெள்ளிக்கிழமை காலை நாட்டிங்ஹாமில் உள்ள அன்னஸ்லி பகுதியில் ஓசியர் சாலையில் நேர்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு சேவையினர் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் குழந்தைகள் உட்பட பலர் பாதுகாப்பாக வெளியேறுவதை பார்த்ததாக பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஷானியா ஆம்ஸ்ட்ராங் என்ற பயணி தெரிவிக்கையில், பகல் 8.03 மணியளவில் அந்த பேருந்தில் புகை வெளியேறியது, சுமார் 10 நிமிடங்களில் தீ பிடிக்கத் தொடங்கியது, ஆனால் துரிதமாக செயல்பட்டு, அனைவரும் பத்திரமாக அந்த பேருந்தில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது இரண்டு பெரியவர்களும், இளைஞர்கள் இருவரும், இரு சிறார்களும் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த தீயணைப்பு சேவை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிறுவனம் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில், தங்களின் மூன்று பேருந்துகளில் ஒன்று துரதிர்ஷ்டவசமாக இன்று தீ விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால், அதன் சாரதி துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்தின் காரணம் தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும், படணிகளிடம் மனிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.