தென்ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரான ஜோகன்னஸ்பர்க்கில் ஜுஸ்கி என்கிற மிகப்பெரிய ஆறு உள்ளது.
உள்ளூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அந்த ஆற்றின் கரையில் ஞானஸ்நானம் உள்ளிட்ட மத சடங்குகளை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஜுஸ்கி ஆற்றங்கரையில் ஞானஸ்நானம் விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங்கரையில் நின்றிருந்த பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதை தொடர்ந்து நீச்சல் வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றுக்குள் இறங்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்களை தேடும் பணியில் இறங்கினர். 2 நாட்களாக இந்த தேடுதல் வேட்டைதொடர்ந்தது. எனினும் 14 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
இன்னும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.