News

பாரிஸில் பொலிசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல்!

பிரான்சின் தலைநகரில் முக்கியமாக குர்திஷ் மக்கள் வசிக்கும் பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் நீதிக்காகக் கோரி பேரணியில் ஈடுபட்டபோது, பாரிஸில் எதிர்ப்பாளர்கள் பொலிஸாருடன் மோதினர்.

நகரின் பாரம்பரிய ஆர்ப்பாட்டங்களுக்கான இடமான ப்ளேஸ் டி லா ரிபப்ளிக் சதுக்கத்தில் முன்பு கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்திய பொலிசார் மீது எதிர்ப்பாளர்கள் கற்கள் மற்றும் எறிகணைகளை வீசுவதைக் காட்டியது.

பாரிஸின் 10வது மாவட்டத்தின் பரபரப்பான பகுதியில் உள்ள குர்திஷ் கலாச்சார மையம், அருகிலுள்ள கஃபே மற்றும் சிகையலங்கார நிலையம் ஆகியவற்றில் இருந்த மக்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

வெளிநாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 69 வயதுடைய நபர், சம்பவத்தின் போது காயமடைந்து தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, அவர் புலம்பெயர்ந்தவர்களைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்த மாத தொடக்கத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு இனவெறி நோக்கம் இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் கருதினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top