News

பிரித்தானியாவில் பரவும் புதிய வகை நோய் தொற்று: பலியாகும் குழந்தைகள்

 

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்று தற்போது பரவலடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ட்ரெப் ஏ என்பது தொண்டை அழற்சி,டான்சில்லிடிஸ் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் பொதுவான தொற்று ஆகும்.

இந்நிலையில் குறித்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப் பாடசாலை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை தொடக்கப் பாடசாலையின் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் குறித்த மாணவர் தொடர்பான விடயங்கள் வெளியிடப்படவில்லை.

பிரித்தானியாவின் சுகாதார சேவை இந்த மரணத்தை உறுதி செய்துள்ளது.

பாடசாலைக்கு பொது சுகாதார ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்க ஈலிங் கவுன்சிலுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சர்ரேயில் உள்ள ஒரு பாடசாலையில் ஆறு வயது சிறுமி ஒருவர் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது.

அத்துடன் நான்கு வயது சிறுவன் ஒருவரும் நவம்பர் 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top