News

பெற்றோர்களே கவனம்… அதிகரிக்கும் சிறார் இறப்பு எண்ணிக்கை: முதன்முறையாக எச்சரித்த பிரித்தானிய மருத்துவர்கள்

பிரித்தானியாவில் Strep A தொற்றுக்கு மேலும் ஒரு பிள்ளை பலியான நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் Strep A தொற்றுக்கு பலியான சிறார்களின் எண்ணிக்கை 16 என அதிகரித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை Strep A பாதிப்புக்கு 15 சிறார்கள் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இன்னொரு குழந்தையும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெல்ஃபாஸ்ட் பகுதியில் 5 வயது சிறுமி ஸ்டெல்லா மற்றும் வேல்ஸில் 7 வயது சிறுமி ஹன்னா உட்பட 16 பேர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரித்தானியாவின் UKHSA அமைப்பின் நிபுணர்கள் உட்பட பலர், பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொற்றானது லேசான அறிகுறிகளுடன் காணப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Strep A தொற்றானது 2017 மற்றும் 2018ல் பரவியபோது 27 சிறார்கள் உடபட 355 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக UKHSA அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கி இதுவரை 169 சிறார்கள் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பு எச்சைக்கை விடுத்துள்ளது.

மேலும் சிறார்கள் மட்டுமின்றி பல வயதினர் இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதகவும், நவம்பர் 20 வரையில் வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை 851 எனவும் தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top