வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதேபோன்றதொரு சூழலே காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09.12.2022) உரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய பிரதேசத்தில் நில அபகரிப்பானது தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
பொருளாதார நெருக்கடி நாட்டில் உச்சத்தை தொட்டுள்ள போது வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
இப்படியானதொரு இக்கட்டாண சூழலை எம் மக்கள் எதிர்நோக்கும் போது இராணுவம் தனக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.