ரஸ்யாவை திணறடித்த உக்ரைன் – 93000 வீரர்கள் கொன்று குவிப்பு..!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இதுவரை 93,000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) நடத்தி வரும் போர் தாக்குதல் 10வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போர் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்யா கைப்பற்றி வைத்து இருந்த கெர்சன் உட்பட முக்கிய கிழக்கு உக்ரைனிய பகுதிகளை சமீபத்தில் ரஷ்ய படைகளை இழந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.
இருப்பினும் உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடர்ந்து முன் நகர்த்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தொலைக்காட்சி வாயிலாக நேற்று தெரிவித்து இருந்தார்.
அத்துடன் உக்ரைனுடனான இந்த போர் தாக்குதலில் அணு ஆயுதங்களை ரஷ்யா முதலில் பயன்படுத்தாது என ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) தெரிவித்து இருந்தாலும், ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் நிச்சயம் அணு ஆயுதங்களை பயன்படும் என்றும் புடின் (Vladimir Putin) குறிப்பிட்டு பேசி இருந்தார்.
ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இதுவரை 93,000 ரஷ்ய வீரர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைன் ராணுவம் 340 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இரண்டு டாங்கிகள், இரண்டு கவச வாகனங்கள் மற்றும் இரண்டு பீரங்கி அமைப்புகளும் அழிக்கப்பட்டன.
மேலும் உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை தாக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது