போருக்கு முன்னர் சுமார் 70,000 மக்கள் வசித்த நகரமாக இருந்த பாக்முட், தற்போது குண்டுவீச்சுக்கு ஆளான பேய் நகரமாக மாற்றப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ச்சியான வெடிப்புகளுக்கு மத்தியில் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த நகரமானது விநியோக வழிகளின் ஒரு முக்கியமான சங்கமத்தில் அமைந்திருக்கிறது.
இருப்பினும், தற்போது போர் நடைமுறையை விட அடையாளமாக இது உள்ளது. பாக்முட்-ஐ கைப்பற்ற ஒருநாளைக்கு 100 துருப்புகளுக்கு மேல் ரஷ்யா பலிகொடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.
ஆனால், அவ்வாறு கைப்பற்றும் அளவுக்கு அந்நகருக்கு மதிப்பில்லை என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், நகரின் மையத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் கொடூரமான நகர்புறப் போரில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்கு இடையில் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையில், நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் சேறும், சகதியுமாக மாறிவிட்ட நிலையில் ரஷ்ய துருப்புகள் முதலாம் உலகப்போர் பாணியிலான பயனற்ற முயற்சிகளில் அணிவகுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலத்தில், சதுப்பு நிலம் போன்ற அகழிகளில் பதுங்கியிருந்து வீரர்கள் ஒருவரையொருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
அதேபோல் பீரங்கி குண்டுகள், டாங்கிகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கொடூரமான வீடியோ ஒன்று, ரஷ்ய வீரர்களின் மனித அலையைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
வாக்னர் குழுவின் கூலிப்படையினர் பலர் அதில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் முதலாம் உலகப்போரைப் போல் அவர்கள் பாக்முட்டிற்கு அருகில் உள்ள கிராமப்புறங்களில் தப்பி ஓடும்போது துண்டு துண்டாக அடித்து நொறுக்கப்பட்டனர்.
ரஷ்யாவின் வாக்னர் ராணுவ பிரிவு, பல மாதங்களாக மனித அலை தந்திரங்களை பாக்முட்டில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பல உக்ரைன் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மோசமான பயிற்சி பெற்ற ஆட்களை வாக்னர் அனுப்புவதாகவும், அவர்கள் பெரும்பாலும் கைதிகளை தற்கொலை தாக்குதலுக்கு முன்னோக்கி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.