News

பெருவில் அவசர நிலையை மீறி மீண்டும் போராட்டம்: வன்முறை வெடித்ததால் பரபரப்பு

 

தென்அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவசர நிலையை அறிவித்த காஸ்டிலோ பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி அவரது பதவியை பறித்தனர்.

மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக காஸ்டிலோ கைது செய்யப்பட்டார். துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபராக பதவி ஏற்றார்.

இதற்கிடையே காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட் டத்தில் குதித்தனர். பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து பெருநாட்டில் கடந்த 14-ந் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் மற்றும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர நிலையை மீறி அவர்கள் போராட்டங்களில் குதித்தனர்.

அயகுக்கோவில் உள்ளூர் நீதித்துறை மற்றும் வக்கீல் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். பல இடங்களில் முக்கிய சாலைகளை மதித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் 5 விமான நிலையங்களை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் விமான நிலையம் மற்றும் பிற இடங்களில் தாக்குதல்களை தடுக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தினர்.

காஸ்டிலோவை விடுவிக்க கோரியும், புதிய அதிபர் டினா பொலுவார்ட் ராஜினாமா செய்ய கோரியும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை பலி எண்ணிக்கை ௨௦ ஆக உயர்ந்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top