News

அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎல் தலைவர் உயிரிழப்பு!

வடக்கு சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) மூத்த தலைவர், அமெரிக்க இராணுவ தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் ஐஎஸ்ஐஎல் தலைவரும், ஐஎஸ்ஐஎஸ்-ன் உலகளாவிய வலையமைப்பிற்கான முக்கிய உதவியாளருமான பிலால் அல்-சுடானி கொல்லப்பட்டுள்ளார்.

இந்த இராணுவ நடவடிக்கை இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

ஆபிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் வளர்ந்து வரும் இருப்பை வளர்ப்பதற்கும், ஆப்கானிஸ்தான் உட்பட உலகளாவிய குழுவின் செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கும் அல்-சுடானி பொறுப்பு என்று ஆஸ்டின் கூறினார்.

அமெரிக்கப் படைகள் எவ்வாறு இந்த நடவடிக்கையை மேற்கொண்டன அல்லது எத்தனை அமெரிக்கப் படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது உட்பட, நடவடிக்கை பற்றிய வேறு விபரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இந்த நடவடிக்கையில் அல்-சூடானியின் 10 கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தனர்.

2012ஆம் ஆண்டில், அல்-ஷபாப் பயிற்சி முகாமிற்குச் செல்வதற்கு வெளிநாட்டுப் போராளிகளுக்கு நிதியுதவி அளித்ததற்காக அல்-சூடானி அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top