News

அரசுக்கு வலுக்கும் சிக்கல் – உருவாகிறது பலமான கூட்டணி

 

 

எதிர்க்கட்சியில் உள்ள பல எம்.பி.க்கள் இணைந்து இந்த வாரம் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்போது நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படும் உத்தர லங்கா கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவின் குழு, டலஸ் அழகப்பெருமவின் குழு, சிறிலங்கா சுதந்திரக் கட்சிஎன இந்த பலமான கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரும் எதிர்வரும் காலங்களில் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டணி உருவானதன் பின்னர் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலமும் வீழ்ச்சியடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top