இத்தாலியின் – நாபோலி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இத்தாலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்