News

ஓய்வு பெறும் வயதை மாற்ற வாய்ப்பே இல்லை… போராட்டங்களுக்கு அசைந்துகொடுக்காத பிரான்ஸ் பிரதமர்

பிரான்சில் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்தும் மேக்ரானின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.

ஆனால், போராடங்களைக் கண்டு அரசு அசைந்துகொடுப்பதுபோல இல்லை. பிரான்ஸ் பிரதமரான Elisabeth Borne, ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் விடயம் குறித்து பேச்சுவார்த்தைக்கெல்லாம் இடமில்லை என்று கூறிவிட்டார்.

இதற்கிடையில் அரசு குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதை வரவேற்றுள்ள தொழிலாளர் யூனியன்கள், ஆனாலும், ஓய்வு பெறும் வயதை 64ஆக உயர்த்துவதை அரசு விட்டுக்கொடுத்தே ஆகவேண்டும் என பிடிவாதமாக இருக்கின்றன.

அரசின் மறுசீரமைப்பை நியாயமற்றது என்று கூறியுள்ள பிரான்சின் எட்டு பெரிய தொழிலாளர் யூனியன்கள், இதற்கு முன் நடந்த போராட்டங்களைவிட நாளை பிரம்மாண்டமான போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top