கனடாவில் புதிய கோவிட் உப திரிபு குறித்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் திரிபுகளில் ஒன்றான ஒமிக்ரான் திரிபின் புதிய உப திரிபான XBB.1.5 என்னும் திரிபு கனடாவில் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் வரையில் இந்த திரிபினால் பாதிக்கப்பட்ட 21 பேர் கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த திரிபு வேகமாக பரவுகின்றதா இல்லையா என்பது குறித்து தற்போதைக்கு எதிர்வுகூறல்களை வெளியிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவிலும் சர்வதேச ரீதியிலும் கோவிட் திரிபு பரவுகை தொடர்பிலான மாற்றங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் திரிபின் XBB.1.5 உப திரிபு அமெரிக்காவில் அதிகளவில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வகை திரிபு வேகமாக பரவக்கூடியது எனவும், மரணம் கூட ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்த் தொற்று திரிபு பரவியவர்கள் எண்ணிக்கை கனடாவில் மிக குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.