News

குவியும் சடலங்களால் திணறும் பிரித்தானிய மருத்துவமனைகள்: சவக்கிடங்குகளில் இடமில்லை

பிரித்தானியாவில் மருத்துவமனை சவக்கிடங்குகள் மொத்தமாக நிரம்பிவரும் நிலையில், சடலங்களை பாதுகாக்க தற்காலிகமான அமைப்புகள் உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், குளிரூட்டும் வசதியும் செய்யப்பட்டுள்ளதுடன், 24 மணி நேர கண்காணிப்பும் ஏற்படுத்தியுள்ளனர். மருத்துவமனை வாகனங்கள் சடலங்களை தொடர்புடைய தற்காலிகமான சவக்கிடங்குகளில் எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்று ராயல் லிவர்பூல் மருத்துவமனையிலும் இரண்டு தற்காலிகமான சவக்கிடங்குகள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்காலிகமான சவக்கிடங்குகளுக்காக கண்டெய்னர்களை பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொன்றிலும் 35 சடலங்கள் வரையில் பாதுகாக்க முடியும்.

இதுபோன்ற ஒருநிலை, நாளும் 1,000 மரணங்கள் ஏற்பட்ட பெருந்தொற்று காலகட்டத்தில் உருவானதாக கூறப்படுகிறது. அதுபோன்ற ஒரு நிலை தற்போது இல்லை என்றாலும், கடுமையான குளிர், குளிர் காய்ச்சல் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்காக காத்திருந்து பலியானவர்கள் என  இந்த முறை 1,600 பேர்களுக்கு மேல் மரணமடைந்துள்ளனர்.

1,600 பேர்களுக்கு மேல் மரணம்

 

மாரடைப்பு அல்லது பக்கவாதம் காரணமாக ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படவில்லை என்றால், அதன் விளைவு மரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை அதிகமாவதற்கும் முதன்மை காரணம் நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பிக்க தவறுவதே எனவும் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுகளின்படி நோயாளிகள் சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்திருக்க நேர்வதால் மட்டுமே, ஒட்டுமொத்த பிரித்தானியாவில் வாரத்திற்கு 300 முதல் 500 இறப்புகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, 999 என்ற அவசர உதவி இலக்கத்தை கையாளுபவர்கள் சுமார் 25,000 ஊழியர்கள் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மேலதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமையும் என எச்சரித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top