கொழும்பில் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(ETI) மோசடி இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள போதும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை அடுத்து அங்கு கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆர்ப்பாட்ட பிரிதிநிதிகள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.