News

கோட்டாபய போல் ரணிலும் விட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார்! சரத் பொன்சேகா

 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் (Gotabaya Rajapaksa) போல் இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் (Ranil Wickremesinghe) வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தவிடாமல் அதனை அரசாங்கம் ஒத்திவைத்தால் மக்கள் போராட்டம் நாடெங்கும் வெடிக்கும்.

இந்த அரசுக்குத் தலைமை தாங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பு இல்லாதவர். அரசுக்குத் தோல்வி ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே உளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அவர் முயற்சிக்கின்றார்.

தேர்தலைத் திட்டமிட்ட திகதியில் நடத்தாவிடின் மக்கள் அனைவரும் வீதியில் இறங்குவார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போல் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார்.

முப்படையினரைப் பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அடக்கலாம் என்று ரணில் விக்கிரமசிங்க எண்ணுவாரானால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை” – என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top