1989ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஒரு சந்தேகநபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தென்னாபிரிக்காவின் சட்டத்தரணியான யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இந்தக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அதிகம் அறிப்படாத மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அவரது கட்டளையின் கீழ் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.