சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் பதில் அளிப்போம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கே இராணுவம் இவ்வாறு பதிலளித்துள்ளது.
சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
1111/2022 என்ற இலக்கத்தை கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேல்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்த்தன தலைமையில் நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கின்ற வகையில் முழுமையான சரியான தகவல்களை 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக இராணுவம் கூறியுள்ளது